• சற்று முன்

    ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5½ கோடி கொள்ளையில் துப்பு துலங்கி உள்ளது. '

    கோப்பு காட்சி

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அன்று கிழிந்து போன பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டது. ரயில் பெட்டியின் கூரையில் துளைபோட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. ரூ.500, ரூ.1,000 கிழிந்த நோட்டுகள் ரூ.325 கோடியளவில் அந்த ரயிலில் கொண்டுவரப்பட்டது. தனி ரயில் பெட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு அந்த பணம் கொண்டுவரப்பட்டது.
    பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொள்ளையர்கள் பணத்தை அள்ளி சென்றுவிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்டமாக இந்த கொள்ளை வழக்கை சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினார்கள். 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான 'நாசா' அளித்த தகவலின் அடிப்படையில், இந்த ரயில் கொள்ளை வழக்கில் துப்பு துலங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
    ஆனால், இந்த தகவலை மறுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வழங்கிய படங்கள் அடிப்படையில்தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.
    ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த திருச்சி ராமஜெயம் கொலைவழக்கு, சென்னையில் மின்சார ரயில் கடத்தி செல்லப்பட்டு விபத்துக்குள்ளான வழக்கு போன்ற பெரிய சம்பவங்களில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது இந்த ரெயில் கொள்ளை வழக்கிலாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துவிட வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். இந்த வழக்காவது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று விவரிக்கிறது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad