Header Ads

  • சற்று முன்

    என்னைக் கொல்லாதே ....... நீலம் மூன் இதன் முன்கதை (22.08.18) பார்க்கவும்


    காந்தா; எனக்கு டெல்லியில் வேலை முடிந்து சென்னைக்கு வந்துட்டேன். நேர வீட்டுக்கு வர்றேன்,  வாடா வா .  நீலேஷ் .எனக் கூறிக் கட்டிலில் சாய்ந்தான் காந்தன். ராகினி ஆன்டி இறந்த செய்தி  இடியாக இதயத்தில் அதிர்ச்சியைத்  தர  நாலு நாளுலே  இவ்வளவு  பெரிய பேரிடியா.  ஐயோ  ஆன்டி உங்க முகத்தைப் பார்க்குற பாக்கியம் கூடக் கிடைக்கிலையே, உங்க உயிர் பிரியும் போது எப்படி எல்லாம் வேதனையை அனுபவித்து இருப்பிங்க என்ன சொல்ல நினைச்சிருப்பீங்க நான் பக்கத்துல இல்லையே, என மனதிற்குள்ளேயே குமுறியவன்.  ராக்கெட் வேகத்தில் ஓலாவில்  வந்திறங்கினான். 

    நீலேஷ். வண்டி சத்தம் கேட்டு மின்னலாய் விரைந்து நண்பனை கட்டிப் பிடித்து ஓஒவென கதறினான். இருவரும் ராகினியின் வீட்டிற்குச் சென்று சோபாவில் அமர்ந்தனர்.  டேய் என்னாடா நடந்தது அவங்களுக்கு  நொடியில சாவுவறத்துக்கு  அப்படி என்ன நோய்டா. கண்ணீர் சிந்தினான். சொல்லத் தெரியில்ல ஆனால் ஏதோவொரு  விஷயம் நடந்திருக்கு  என்னன்னுதான்  விளங்கல  வித்தைக்காரன் செப்புடி வித்தை  காட்ற மாதிரி கதை முடிஞ்சு போச்சு. அன்னம் கொடுத்த காபியை வாங்கி குடித்தான். ஆன்டி,, உங்க கூட ஏதாவது பேசனாங்கள,, உஹ்  உம்ம  இல்ல எனத் தலைய ஆட்டினாள் அன்னம் .தம்பீ   துஷ்ட சக்தி நடமாடுது, காந்தன் குத்தும் குலையுருமாய் நடுங்குறான் நீ  வந்தது எனக்கு கொஞ்சம் திருப்திகரமாக இருக்குப்பா, கவலையை விடுங்க ஆன்டி நான் பாத்துக்குறேன் என ஆறுதல் கொடுத்து  அனுப்பினான். துஷ்ட சக்தியா   தெய்வம் வாழ்ந்த இடம்.. இந்த வீடு முழுவதும் அவர்கள் விளையாடிய இடம். ஆன்டி கண் முன்னாடி நடப்பது போன்ற பிரம்மை  சூழ்ந்தது.  காந்தன் ஒன்று விடாமல் நடந்ததை நண்பனிடம் கூறினான்.  கவனம் சிதறாமல்  உன்னிப்பாக செவிமடுத்தான்.  பின்னர் எல்லாம் ஒகேப்பா  ஆன்டியை போல பொண்ணு எல்லாம் ஓவரா தோணுது. சும்மா  ரெஸ்ட் எடு என்றாவாறு  எழுந்தான். 

    டேய்  கற்பனையில் பேத்தல நிஜம்.  அந்த குலோப்ஜாமூன் தூக்கும், மோதிரமும் எங்கே. சினத்தில் ஆவேசப்பட்டான். காந்தன். .அமைதி நண்பா சாந்தம் தேவை. அதிர்ச்சியில் உன் மனசும் உடம்பும் ஒன்னோடு ஒன்னு வேலை செய்யாது  மக்கார் செய்யும் போது புத்தி யார் சொன்னாலும்.  ஏறாது வீணா மூளையை  கசக்காதே என்றதும்  மங்க்குன்னி  மடையா கிளிபிள்ளை போல பேசனதைய   திரும்ப திரும்ப  சொன்னா  மட்டியா  மூச்சு வாங்கியது. உடல்  சோர்வுடன்  கழுத்து   நரம்பு  புடைக்க ஓவென கத்தினான். சத்தம் கேட்டு அன்னம் நடராஜன் ஓடி வந்தனர். நீலேஷ் ஒரு கணம் அசந்து நின்றான். மெதுவாக நண்பனின்  புஜத்தில் கையைப் போட்டு சரிப்பா இப்ப நீ என்ன சொல்ல  வர்றே  கேட்குறேன், ம் ம்...அரவிந்தன்  மெடிக்கல் ஷாபில் ஆன்டியை ஒத்த  உருவம் நேத்து இராத்திரி பார்த்தேன். 

    அப்புறம்.  ராகினி ஆன்டியைகொலை பண்ணிட்டாங்களா  என்று சந்தேகமாக இருக்கு  இராத்திரி அன்னியாயமாய்  கொன்னுட்டாங்க காந்தா என புலம்பினாள்.  ச்சீச் சீ..அவங்கள யாரு கொல்லுவாங்க உறவே  இல்லாதவங்க இப்போது வரை அவங்களைப் பற்றி சரியான தகவலும்  தெரியாது இயற்கையா நடந்ததை நிகழ்ச்சியை திசை திருப்புறடா.  நீலேஷ் நானா.. நானா   நாலா பக்கம் கண்ணை  உருட்டினான். க்கூல் கூல் இப்போ  அரை மணி நேரம் ரெஸ்ட் எடு நான் மறுபடியும் வர்றேன். விபரீதமாக ஊகிக்காதே என அறிவுரை வழங்கி புறப்பட்டான்.

                                                                  தொடரும்...............


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad