• சற்று முன்

    பழனியில் மீனவர் கூட்டுறவு சங்க பதிவியேற்பு விழாவில் தள்ளு முள்ளு


    பழனியில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த 16த் தேதி நடைபெற்றது இதில் இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்.இதில் அதிமுக அணியில் 5 நபரும் கம்யூனிஸ்ட் அணியில் 2 நபரும் வெற்றி பெற்றனர்.


    இதனடிப்படையில் இன்று பதவியேற்ப்பு விழா,மற்றும் தலைவர், துணைத்
    தலைவர் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கிலி தலைவராகவும் மகுடீஸ்வரன் துணை தலைவராகவும் தாங்களுக்குள்ளே பேசி முடிவெடித்தனர். ஆனால் இதை ஏற்க்க மனமில்லாமல் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களான அன்னாவி, இளையராஜா என்பவர்கள் நாங்கள் தலைவர் தேர்தலுக்கு வரமாட்டோம் என்று கூறிவிட்டனர்.மேலும் எதிரணிக்கு வாக்களிக்க போவதாக தகவல் வந்தது இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. நீண்ட நேரம் கழித்து வந்த இரண்டு வேட்பாளர்கள் காரைவிட்டு இறங்கியவுடனே அதிமுக கட்சிகாரர்கள் தனியாக இரண்டு பேரையும் தூக்கி சென்று மூளைச்சலவை செய்து விட்டனர் இதனை காவல்துறை வேடிக்கை பார்த்ததால் மற்ற அணியிணர் காவல்துறைக்கு எதிராக கோசமிட்டனர்.


    இறுதியாக இரண்டு வேட்பாளர்களையும் சம்மதிக்க வைத்து கடைசியில் தலைவர் துணைதலைவர்களை ஏற்றுக் கொள்கின்றோம் என்று சொல்ல வைத்தனர்.மேலும் எதிர் அணியிணர் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இவர்களை நாங்கள் சந்தித்துக் கொள்கின்றோம் என்று கூறி கலைந்து சென்றனர்....

    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad