
கடந்த 2009 ஆண்டு திருமணம் ஆகி மார்ச் மாதம் கர்ப்பம் அடைந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் சென்னை அரசு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தேன். அபோது பரிசோதித்த டாக்டர் கர்ப்பம் அடைந்திருப்பதாக சிகிச்சை அளித்தனர். எங்கள் குடும்பத்த வரும் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர். எனக்கு நவம்பர் 18-ந்தேதி பிரசவம் நடைபெற வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறினார்கள். தொடர்ந்து கஸ்தூரிபா மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றேன்.சீமந்தம் செய்து மகிழ்ந்தனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரும் எனக்கு பிரசவ வலி எதுவும் ஏற்படவில்லை. 2016-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி என்னை பரிசோதித்த கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நான் கர்ப்பம் அடையவில்லை. அடிவயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக கூறினார்கள். இதைக் கேட்டு எனது குடும்பமே அதிர்ச்சியடைந்தது.கர்ப்பம் அடைந்ததாக கூறியதால், டாக்டர்கள் பரிந்துரை செய்த மாத்திரை, மருந்துகளை 8 மாதங்களாக சாப்பிட்டு வந்தேன்.தவறான பரிசோதனையால், எனக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும் மனரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திய டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." என்று சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த அசினா பேகம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை