• சற்று முன்

    ஸ்டெர்லைட் ஆலையில் பணி புரிந்தவர்களுக்கு மாற்று பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - கடம்பூர் செ.ராஜீ தெரிவித்துள்ளார்.



    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீவை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மனு அளித்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று பணி   வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் சிதம்பரபுரத்தில் இருக்கும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ இல்லத்தில் அமைச்சரை ஸ்டெர்லைட் அனைத்து ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கத்தினர், அதன் தலைவர் தியாகராஜன் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதே போன்று ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மைக்கில் என்பவரது தலைமையிலும், தெற்கு வீரபாண்டியபுரம் மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் தலைமையிலும் அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களுடைய வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுடையை வாழ்வாதரம் பாதிக்கப்படமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவு, எனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாற்றுபணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



    இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2013 ஆண்டு வாயு கசவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆலையை தொடர்ந்து இயக்கியது, அந்த ஆலை விரிவாக்க பணிகளுக்கு திமுக இடம் அளித்தது. இதற்கிடையில் மக்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் தொடங்கியதும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஆலையின் உரிமத்தினை அரசு புதுப்பிக்கமால் நடவடிக்கை எடுத்து ஆலையினை முடியது, ஆனால் சில அமைப்புகள் தொடர்ந்து போராடினர். இது குறித்து மீனவமக்கள் தெளிவாக நேற்று முன் தினம் தெரிவித்துள்ளனர். அரசு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று கொள்ளை முடிவு எடுத்து முதல்வர் அரசாணை வெளியிட்டார். மேலும் ஆலைக்கான மின்சாரம், குடிநீர் தடை செய்யப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனு அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது அரசின் கொள்கை முடிவு, நேரிடையாகவும், மறைமுகாவும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று பணிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை – தூத்துக்குடி தொழிற்வழிச்சாலை அமையும் போதும், தூத்துக்குடியில் கடல் நீரை குடிதண்ணீராக மாற்றும் திட்டப்பணி மற்றும் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் பணி கொண்டு வருவதற்கான ஆய்வில் உள்ளது. இந்த பணிகளின் போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாற்று பணிகள் வழங்கவும், அரசின் புதிய திட்டப்பணிகள் தூத்துக்குடி வரும் போதும், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  nms today you tube channellai  பார்க்கவும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad