Header Ads

  • சற்று முன்

    ஒசூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் , கைது செய்து விடுவிப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலிஸார் கைது செய்து மாலை விடுவித்தனர் ஒசூர் முதல் சிப்காட் பகுதியிலுள்ள மின்சார சாதனங்கள் உற்பத்தி செய்யும் (ஈஸன் ரீ ரோல்) தனியார் தொழிற்சாலை கடந்த 1979ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது

    தற்போது 5 பெண்கள் உட்பட 68 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் , 6 வருட காலமாக பல்வேறு தொழில் பிரச்சனை காரணமாக தொழிற்சாலை சரி வர இயங்கவில்லை, இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி தொழிலாளர்கள் தங்களுடைய மாத சம்பளம் வழங்கவில்லை மேலும் பிஎப் , எல் ஐ சி வீட்டு கடன் ஆகியவற்றை பிடித்தம் செய்து கட்டாமல் ஏமாற்றி வருவதாக கூறி தொழிற்சாலையில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் , இந்நிலையில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு லே ஆப் கொடுத்துள்ளதாக தெரிகிறது இதனால் கம்பெனி  ஊழியர்கள் உள்ளே உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட கூடாது என போலீஸ் வைத்து வெளியேற்றி கைது செய்தனர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 68 பேரை போலிஸார் மாலை விடுவித்தனர்

    சங்க நிர்வாகி தெரிவிக்கையில் , நிர்வாகம் நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருந்த கம்பெனியை மூடுவதற்கு முயற்ச்சி மேற்க்கொண்டு , தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் ஈடுபட்டு வருகின்றது , எனவே தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களை காப்பற்ற நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்,

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad