பாலியில் வன்கொடுமை வழக்கில் ஈடுபட்ட 17 பேருக்கு ஆகஸ்ட் 10 வரை நீதி மன்ற காவல் நீடிப்பு
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 17 பேருக்கும் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 10 வரை நீட்டித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே அவர்களுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. முன்னர் 17 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதுகாப்பு கருதி அவர்களை போலீசார் மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 10 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை