Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகரில் பகுதி நேர நியாய விலை கடை அமைச்சர் R. கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார்.


    தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகரில் பகுதி நேர நியாய விலை கடை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் R. கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியாளர் சந்தீப் நந்தூரி  தலைமை வகித்தார்.தொடர்ந்து சீனிவாச நகரில் குடி நீர் விநியோகத்தினையும் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெய் சிங் நாடார், கோட்டாச்சியர் விஜயா உள்ளிடோர் பலர் கலந்து கொண்டனர்.

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு 3வது நீதிபதிக்கு சென்றுள்ளதால் கருத்து கூற முடியாது. நீதிமன்ற தீா்ப்பு குறித்து எதிா்கட்சிகள் கூறலாம்.. நாங்கள் கூற கூடாது. தமிழகம் தான் அமைதியாக வாழ தகுதியான மாநிலம். தூத்துக்குடி மீனவா்களின் கோாிக்கையை ஏற்று 24 அடி நிளமும், 240 ஹெச் பி மோட்டா் கொண்ட விசைபடகு கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போராடுபவா்களை போராட விடுவது தான் ஜனநாயகம் ..
    ஆகையால் தான் தமிழகத்தில் ஒரு ஆண்டில் 23 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.. ஜல்லிக்கட்டு, காவிரி, ஸ்டொ்லைட் என எல்லா போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்து தீா்வு கண்டுள்ளது தமிழக அரசு
    ஸ்டொ்லைட் ஆலைப்பிரச்சினைக்கு காவல்துறையினா் மக்களை கைது செய்வதாக கேட்ட கேள்விக்கு படிப்படியாக காவல் துறை நடவடிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தொிவித்தாா்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad