Header Ads

  • சற்று முன்

    ரயில் ரத்து செய்யப்பட்டால் IRCTCயின் இணையத்தளத்தின் மூலம் முன்பதிவு செய்த பயணச்சீட்டுக்கான கட்டணம் தானாகவே வங்கிக்கணக்கில் வந்து சேரும்


    ரயில் ரத்து செய்யப்பட்டால் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டும் தானாகவே ரத்தாகி அதற்குரிய பணம் வங்கிக் கணக்கில் தானாகவே சேர்க்கப்படுவது நடைமுறைக்கு வந்துள்ளது.

    மழைவெள்ளம், போராட்டம், தொழில்நுட்பக் காரணங்கள் ஆகியவற்றால் ரயில்கள் ரத்து செய்யப்படும் போது கவுண்டரில் பயணச்சீட்டு எடுத்த பயணிகள் அதைக் கவுண்டரில் கொடுத்து ரத்து செய்வதும், ஐஆர்சிடிசியில் பயணச்சீட்டு எடுத்தவர்கள் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் ரத்துச் செய்வதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

    ஒரு ரயில் புறப்படும் இடத்தில் இருந்து சேருமிடம் வரை முழுவதும் ரத்து செய்யப்படும்போது ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்தவர்களுக்கு பயணச்சீட்டுக்கான பிஎன்ஆர் தானாகவே ரத்தாகி அதற்குரிய கட்டணம், அவர்கள் எந்தக் கணக்கில் இருந்து செலுத்தினார்களோ அந்தக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் நடைமுறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad