Header Ads

  • சற்று முன்

    குடிரயசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மன்மோகன்சிங் கடிதம்


    பிரதமர் நரேந்திரமோடி காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசி வருவதாகவும், எனவே அவரை எச்சரிக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
    குடிரயசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மன்மோகன்சிங் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், முகுல்வாஸ்னிக், அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கையொப்பமிட்டுள்ளனர்.
    அதில் கடந்த காலங்களில் இந்திய பிரதமர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் நல்லிணக்கத்தையும், நல்லொழுக்கத்தையும் பேணி வந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியில் அரசின் தலைமை இடத்தில் உள்ள பிரதமர், முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் தலைவர்களையும், உறுப்பினர்களையும் மிரட்டும் விதத்திலும், எச்சரிக்கும் வகையிலும் பேசி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இழிவுபடுத்தும் விதமாகவும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான வார்த்தைகளை பிரதமர் மோடி பயன்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக அச்சுறுத்தும் மொழியில் பிரதமர் பேசியதை எதிர்பார்க்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது மற்ற கட்சி நபர்களுக்கு எதிராகவோ இது போன்ற தேவையற்ற, மிரட்டும் தொனியிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று பிரதமரை, குடியரசுத் தலைவர் எச்சரிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad