• சற்று முன்

    விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை - சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் தாக்க முயற்சி



    வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணு மீது இந்துத்துவா அமைப்பினர் சிலர் தாக்க முயற்சி மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    விழிப்புணர்வு பயணம் காரணமாக இன்று வேலூர் வந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, கோட்டை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் மனுவினையும் கொடுக்க சென்றார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு. தமிழக விவசாயிகளை காப்பாற்ற பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மோடி வீட்டு முன்பு விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்துவோம் என்றார். இந்த போராட்டத்திற்கு தமிழக முதலமைச்சரை அழைப்போம், அவ்வாறு அழைத்தும் முதலமைச்சர் வராவிட்டாலும் போராட்டம் நடத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.அந்த நேரத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பினர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அய்யாக்கண்ணு பேசியதை கண்டு ஆத்திரமுற்றனர். பிரதமர் மோடியை பேசியதால் அந்த அமைப்பினர் அய்யாக்கண்ணுவிடம் வந்து வாக்குவாதம் செய்தனர். "மோடியை பற்றி விமர்சிக்கவும், விவசாய சங்கத்திற்கு தலைவனாக இருப்பதற்கும் உனக்கு தகுதியில்லை" என்று அய்யாக்கண்ணுவை ஒருமையில் பேசினார்கள்.
    இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், அந்த அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியநிலையில், அந்த அமைப்பினர் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்றனர். ஆனால் அதற்குள் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தி, அந்த அமைப்பினரிடமிருந்து அய்யாக்கண்ணுவை மீட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad