பிரபல எழுத்தாளர் பாலா குமாரன் இன்று மறைவு
தஞ்சாவூர் மாவட்டம் திருகாட்டூர் பள்ளி அருகே பழமாநேரியில் பிறந்தவர். பிரபல எழுத்தாளர் பாலகுமாரன். சென்னைக்கு வந்து டிராக்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
அப்போது முதலே சிறுகதைகள் , கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும் இருநூறுக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள இரும்பு குதிரை நாவலுக்கு சாகத்திய அக்காடமி விருது பெற்றார்.
பின்னர் திரை படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதினார். இவர் முதன் முதலில் கமல் நடித்த நாயகன் படத்தில் வசனம் எழுதினார். ரஜினி நடித்த பாட்சா படத்தில் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி என்கிற வசனத்திற்கு சொந்தக்காரர். ஜீன்ஸ், புதுக்கோட்டை, போன்ற திரை படங்களுக்கு திரை கதை வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 71 வயதான பாலகுமாரன் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் சரியில்லாமல் மருத்துவமனியில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இழப்பு கதை படிக்கும் வாசர்களுக்கு பெரும் இழப்பாகும். அண்ணாருக்கு திரைப்பட துறையினர், பத்திரிகை துறையினர், இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை