தூத்துக்குடி போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த குடும்பத்தாருக்கு 10 லட்சம் இழப்பீட்டு ! முதல்வர் அறிவிப்பு
தூத்துக்குடி என்றால் உப்பளத்திற்கு புகழ் பெற்றது. அன்னியர் ஆட்சியில் உப்பு மீது போடப்பட வரியை ரத்து செய்ய கோரி தமிழகத்தில் தேசிய தலைவர்கள் அறவழியில் மிக பெரிய போரட்டங்கள் சந்தித்த பூமியில் அபோது போராட்டத்தில் தடியடி தான் நடைபெற்றது,
ஆனால் இன்று அதே தூத்துக்குடியில் கொடிய விஷ வாயுவை காற்றில் கலந்து நோய்களையும் மரணங்களையும் விளைவித்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி அறவழியில் பேரணி ஏற்பாடு செய்தது.இதற்கு செவி சாய்க்காத அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து போராடிய போராளிகளை காவல் துறையை ஏவி ஏதோ காக்கா குருவி சுடுவது போல் சுட்டு தள்ளியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடைபெற்ற பேரணியை கலவரமாக்கி பின்னர் காவல் துறை துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் தற்போது 10 பேர் உயிர் இழந்தனர். சுமார் 75 பேர் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதே அரசு இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்சம் இழப்பீட்டு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இது வெந்த தீ காயத்தில் சூடு கம்பியை பாய்ச்சிவது போல் உள்ளது.
கருத்துகள் இல்லை