கோவில்பட்டி அருகே தனியார் காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழியில் இறங்கி மக்கள் போராட்டம்
கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் உசிலங்குளத்தினை கிருஷ்ணசாமி என்பவரது மனைவி சுப்புத்தாய்(76), இந்த மூதாட்டியிடம் அதே ஊரைச் சேர்ந்த நிலத்தரகர் அய்யாத்துரை, சாத்தூரைச் சேர்ந்த மாரியப்பராஜ், குருக்கள்பட்டியை சேர்ந்த செந்தில் ஆகியோர், தனியார் காற்றாலைக்கு இடம் தேவைப்படுவதாகவும், நல்ல விலை கிடைக்கும் என்று கூறி நில பத்திரத்தினை பெற்றதாக தெரிகிறது. இதற்கிடையில் சுப்புத்தாய் 1ஏக்கர் 70சென்ட் இடத்தினை, நிலத்தரகர்கள் 3 பேரும், அவருக்கு தெரியமால் தனியார் காற்றாலைக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மூதாட்டி சுப்புத்தாயை ஏமாற்றி, நிலத்தினை விற்பனை செய்துள்ளதாகவும், எனவே காற்றாலை அமைக்கும் பணிகளை நிறுத்த கோரி, சி.பி.எம்.கட்சி கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் தலைமையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அப்பகுதி மக்கள், காற்றாலை அமைக்க தோண்டப்பட்ட குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறை, தனியார் காற்றாலை நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது குறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை