• சற்று முன்

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் திமுகவினர் 5,000 பேர் பங்கேற்பு


    துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 6 கிராம மக்கள் கடந்த 50 நாள்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போது அரசியல்கட்சி தலைவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால் தினசரி துாத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் முற்றுகை ஆகியவை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் துாத்துக்குடி சிதம்பரநகர் பஸ் ஸ்டாப் அருகே துாத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில திமுக துணை செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.



    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.,பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன் மாநில இளைஞரணி செயலாளர் ஜோயல், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ரூபன், முன்னாள் எம்எல்ஏ., ராஜமன்னார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜான் அலெக்சாண்டர், வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன்தாஸ் சாமுவேல் முன்னாள் மேயர் கஸ்துாரிதங்கம்,சிறுபான்மை பிரிவு ஜீவன் ஜேக்கப், முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கீதாமுருகேசன், கலைச்செல்வி திலகராஜ்,சுரேஷ்குமார் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 800 பெண்கள் உள்ளிட்ட 5000 பேர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad