கவர்ச்சி நடிகை சங்கவி ரீ எண்டிரி - அதிர்சியில் நடிகைகள்
நடிகை சங்கவி தல அஜித் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான 'அமராவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதைத்தொடந்து நடிகர் விஜயுடன் 'ரசிகன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு, கன்னட, உள்ளிட்ட மொழிப் படங்களில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சங்கவி இளைய தளபதி விஜயுடன் மட்டும் 'விஷ்ணு', 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'நிலவே வா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சி:
நடிகை சங்கவி நடித்த படங்கள் வெற்றிபெற காரணம் இவர் கவர்ச்சியாக நடிப்பது என பல விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் இவர் கவர்ச்சியாக நடித்தாலும், கதைக்கும் கதாப்பாத்திரதிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார்.
திருமணம்:

கொளஞ்சி:
இவர் திருமணத்திற்கு பின் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனியுடன் 'கொளஞ்சி' என்கிற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருந்தார். கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே உள்ளது.
இந்த படத்தில் மிகவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம் சங்கவி. மேலும் இந்த படத்தை தொடர்ந்து மற்ற சில படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்புகள் வருகிறதாம். இதனால் எப்படியும் இந்த வருடம் தன்னுடைய அடுத்த படத்தை பற்றியும் சங்கவி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முன்னணி நடிகைகளுக்கு பட வாய்புகள் இல்லாத நிலையில், 40 வயதை கடந்த இவருக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ளது போன்ற கதைகள் அமைவதால் சக நடிகைகள் செம ஷாக்கில் உள்ளர்கலாம்.
கருத்துகள் இல்லை