சட்டபேரவையில் 2018-2019 பட்ஜெட் தாக்கல் திமுவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்றம் இன்று கூடியது . தமிழக அரசின் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-19-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது நிதி நிலை அறிக்கை இதுவாகும்.
பல்வேறு பிரச்சனைகளை திமுக எழுப்பும் என்ற நிலையில்,தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு திமுகவினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பெண்கள் கருப்பு புடவை கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு சட்டபேரவை தொடங்கியதும் திமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
கருத்துகள் இல்லை