• சற்று முன்

    மோடியின் ஆட்சியும்,அதிமுக ஆட்சியும் நாட்கள் எண்ணபடுகிறது - கீதாஜீவன் தாக்கு


    திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதிமுக நாள்களும், மோடி ஆட்சியின் நாள்களும் எண்ணப்படுகிறது – கோவில்பட்டியில் எம்.எல்.ஏ. கீதாஜீவன் பேச்சு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் சிலர் முதல்வராக வேண்டும் என்று கட்சி தொடங்குகின்றனர். கொள்கை கோட்பாடு கிடையாது, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அதிமுகவில் தான் வெற்றிடம் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்து பிரதமர் மோடி ஆட்டுவிப்பதால் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக, அடிமைகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டுள்ளது, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, தமிழக பட்ஜெட்டில் எவ்வித திட்டங்களும் இல்லை, கடன் கூடியுள்ளது, வருவாய் பற்றாக்குறை கூடியுள்ளது, விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது.மோடி ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது, எம்.எல்.ஏ தேர்தலை எதிர்பார்த்த நமக்கு எம்.பி.தேர்தலும் வரவுள்ளது. தமிழக கஜனா காலியாகி விட்டது.லேப்டாப், சைக்கிள், திருமணஉதவி தொகை என எதுவும் வழங்கப்படவில்லை,அதிமுக நாள்களும், மோடி ஆட்சியின் நாள்களும் எண்ணப்படுகிறது. விரைவில் இரண்டுக்கும் தேர்தல் வரவுள்ளது. பாஜகவின் எண்ணம் இங்கு பலிக்காது என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad