Header Ads

  • சற்று முன்

    திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் அளிப்பு




    எட்டயபுரத்தில் திமுக சார்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் விழா மற்றும் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கும் விழா பஸ்கட்டண உயர்வைக் கண்டித்து மறியல் போரட்டத்தில் கலந்து சிறை சென்றவர்களுக்கு பாரட்டு விழா எட்டயபுரம் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள சமுதாயக்நலக் கூடத்தில் வைத்து ஞாயிறு அன்று நடைப்பெற்றது.


    இந்த விழாவிற்கு நகரச் கழக செயலாளர் பாரதிகணேசன் தலைமை தாங்கினர். திமுக மாவட்ட பிரதிநிதிகள் பரமசிவன், கல்லடிவீரன், அவைத்தலைவர் அங்குமுத்து, நெசவாளர் அணி அமைப்பாளர் பிச்சை, நகர கழக வர்தக அணி அமைப்பாளர் ராஜேந்திரன், 1வது வார்டு இளைஞர் அணி லெனின், மாணவரணி நகர துணை அமைப்பாளர் மயில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


    இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளாரும் சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி இணைந்து  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட சிறுபாண்மை பிரிவு துணை அமைப்பாளர் செய்யது, ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் ராமச்சந்திரன் நகர கழக துணைச்செயலாளர் அலெக்சாண்டர், ஒன்றிய பிரதிநிதி முகமதுராஜ், செயற்குழு உறுப்பினர் மாரிக்கண்ணன், வார்டு செயலாளர்கள் தேவகிருபை, மாடசாமி, பச்சிராஜ், நகர மகளிர் அணி தமிழ்ச்செல்வி விவசாய அணி கோமதிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் குமார் நன்றி கூறினர்.

    l

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad