Header Ads

  • சற்று முன்

    திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.



    திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றுவதில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது. அக்கட்சியின், திரிபுரா மாநில செயலாளர் பிஜன் தார் "மாநிலத்தில் நிச்சயம் எட்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கும். திரிபுரா மக்கள் மாநிலத்தின் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்காக நிச்சயம் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களித்திருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.


    பாஜக 50 தொகுதிகளிலும், ஏனைய 9 தொகுதிகள் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 59 தொகுதிகளிலும் தனித்தே களம் கண்டுள்ளது. இடதுசாரி மற்றும் பாஜக கூட்டணி நடுவே முன்னிலை நிலவரம் மாறி மாறி வருகிறது. சில நேரங்களில் பாஜக கூட்டணியும், சில நேரங்களில் இடதுசாரியும் முன்னிலை பெறுகிறது.

    இடதுசாரி 22 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad