Header Ads

  • சற்று முன்

    டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கமல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு



    இராமநாதபுரம் மேல ரத வீதியில்  வசித்துவரும் கமல் டி.டி.வி.தினகரன் அணியை சார்ந்தவர்.
    டி.டி.வி.தினகரன் அணியின் மாவட்ட பொறுப்பாளர்  ஆனந்தின் நெருங்கிய நண்பரும் டி.டி.வி. தினகரன் அணியின் இளைஞர் அணி பொறுப்பாளராகவும் உள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசும்போது டி.டி.வி.தினகரன் அணியை சார்ந்த அவர்கள் யாரும் அஇஅதிமுக கட்சியின் கரை வேட்டியை கட்டக் கூடாது என்றும் மீறி கட்டினால் வேட்டியை உறுவுங்கள்  என பேசினார்.


    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ந ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் வீடு உள்ள தெருவிற்கே வருகிறேன் முடிந்தால் வேட்டியை உருவிப்பார் என கூறி நேற்று வந்தார்கள் காவல்துறை அவர்களை அமைச்சர் வீடு உள்ள தெரு வழியாகசெல்ல  அனுமதிக்கவில்லை பின்னர் அவர்கள் கலைந்துசென்றனர் இந்நிலையில் நேற்று இரவு கமல் வீட்டிலும், அதே தெருவில் உள்ள தவ முனியசாமி முன்னாள். கவுன்சிலர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது  சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி வெள்ளை துறை தலைமையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட வர்களை உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும் என தினகரன் ஆதரவாளர்கள் முள்னாள் அமைச்சர் வது.நடராஜன் தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad