• சற்று முன்

    தமிழகத்தில் அதிமுக, திமுக தவிர வேறு யாரும் நிலைக்க முடியாது – அமைச்சர் கடம்பூர்செ.ராஜீ


    தமிழகத்தில் அதிமுக, திமுக தவிர வேறு யாரும் நிலைக்க முடியாது, தனி அமைப்பு தொடங்கிய பின்பு டி.டி.வி.தினரகன் அதிமுக தொண்டர்கள் குறித்து கருத்து தெரிவிக்ககூடாது, அவரது தொண்டர்களை அவர் பார்த்து கொள்ளுவார் என்று கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ சுமார் 35லட்ச ரூபாய் மதிப்பிட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகபட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பட்ஜெட்டாக உள்ளது. கல்வி, விவசாயம் , சுகாதாரம் ஆகியவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியது மட்டுமின்றி, நடு நிலையாளர்களும் பாராட்டும் வரி இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. தமிழகத்தில் பலர் கட்சி ஆரம்பிக்கின்றனர்.அதே போன்று  அவரும் (டி.டி.வி.தினகரன்) தொடங்கியுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு திமுகவை அண்ணா ஆரம்பித்தார். அவர் தொடங்கி காரணத்தினால் அந்த கட்சி இன்றும் உள்ளது, அண்ணாவின் மறைவுக்கு பின்பு அதிமுகவை எம்.ஜீ.ஆர் தொடங்கினார். அவர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்தும், அவரது நூற்றாண்டு விழா கொண்டாடடி, 101வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது இயக்கம் தான் ஆட்சியில் உள்ளது. இந்;த 2கட்சியும் தான் என்றைக்கும் நிலையாக உள்ளது. கட்சி ஆரம்பிபது அவர் (தினகரன்) விருப்பம், தனி  கட்சி , சின்னம் பெற்ற பிறகு அதிமுக மீட்போம் என்று கூறுவது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கமே..தனி அமைப்பு தொடங்கிய பின்பு அதிமுக தொண்டர்கள் பற்றி கருத்து கூற கூடாது. அவரது தொண்டர்களை அவர் பாhத்துகொள்ளுவார்.காவிரிமேலண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக பதவிகளை துறந்த இயக்கம், இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தினை முடங்கும் அளவிற்கு போராடி வருகின்றனர். எம்.எல்.ஏக்களை ராஜினமா செய்ய வேண்டும் என்பது மு.க.ஸ்டாலின் கருத்து 14 ஆண்டுகளாக மத்தியரசில் இருந்தவர்களுக்கு இன்று ஞானதேயம் வந்துள்ளது..சட்டமன்றத்தில் முதல்வர் என்ற கனவில் உள்ளார்.அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது..சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணிமண்டபம் அமைக்கும் பணிகைகளை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad