Header Ads

 • சற்று முன்

  75 வயதான கொல்லங்குடி கருப்பாயி - சம்பளம் கொடுத்தவங்களை விட எமதினவுங்கோ அதிகம்  பர்மா கலவரம் நடந்தபோது என் அத்தை, மாமா பிள்ளைகள் எல்லாம் கால்நடையாகவே கொல்லங்குடிக்கு நடந்து வந்தாங்க. அப்படி வந்தவருதான் என் மன்னவரு. அப்போ எனக்கு 14 வயசு இருக்கும். என் கணவர் நல்லா படிச்சவரு. கொல்லங்குடி கிராமத்துக்குக் கணக்குப் பிள்ளையாக இருந்தவரு. என் அத்தை மகன் செல்லையா. நான் கலைமாமணி விருது வாங்குற அளவுக்கு நாட்டுப்புறப் பாட்டுல உயர்ந்ததுக்கு காரணம் அவர்தான். என்னைய நாட்டுப்புறப் பாட்டு பாடுறதுக்கு ஊக்கப்படுத்துவாரு. புருசனும் பொண்டாட்டியும் நல்லா உழைச்சோம். எங்களுக்குக் கடவுள் ஒரு பிள்ளை குட்டியை  கொடுக்கலே. என் அக்கா மகள்தான் என்னையை கவனிச்சுக்கிட்டு வந்தா . அவளும் கார் விபத்துல இறந்துப் போயிட்டா. இப்போ, அவளோட மகள் வாசுகிதான் என்னைய பார்த்துக்குறா.

  “ஏழு வயசுல நானே சொந்தமா மெட்டு போட்டு வாய்க்கு வந்ததைப் பாட ஆரம்பிச்சு, கலைமாமணி விருது வாங்கற அளவுக்குப் பேரும் புகழுமாக கொடிகட்டிப் பறந்தேன்.
  75 தாண்டினாலும், குரலில் அதே கம்பீரம். நடந்தாலும் பாட்டு; அமர்ந்தாலும் பாட்டு எனப் பாடுவதையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறார் கருப்பாயி..


  'ஆண் பாவம்' நான் நடிச்ச முதல் படம். அதுக்கு அப்புறம் பல படங்கள் நடிச்சேன். இதில், சம்பளம் கொடுத்தவங்களைவிட ஏமாத்தினவங்கதான் அதிகம். ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்துட்டு, 'ஊருக்குப் போங்க அனுப்பி வைக்கிறோம்'னு சொல்வாங்க. நானும் எதிர்பார்த்து காத்திருப்பேன். ஒண்ணும் வராது. சினிமாவுல நடிக்கபோய் என்னை மொட்டையடிச்சு அனுப்பினதுதான் மிச்சம்.
  நடிகர்களும் நடிகர் சங்கமும்

  எனக்குப் பிள்ளை இல்லைங்கிற குறையைப் போக்கி தலைமகனாக இப்பவும் இருக்கிறது நடிகர் பாண்டியராஜன்தான். சென்னைக்கு போனால், என்னைப் பார்க்காம இருக்காது. நான் சினிமாவுல நடிக்கும்போது என்னையை யாரும் நடிகர் சங்கத்துல சேர்க்கலை. பேரன் விஷால் வந்த பிறகுதான், உறுப்பினராக்கி அடையாள அட்டை கொடுத்துச்சு. இன்னைக்கு நான் சாப்பிடுற சாப்பாடு, பேரான்டி விஷால் கொடுக்குற பணம்தான். என்னை வாழவைக்கிற சாமி அது. விஷால் கல்யாணத்துக்கு நான் போணும். அதுவரைக்கும் என் உசுரு இருக்கணும். விஜய் டிவியில் நடத்தறாங்களே 'சூப்பர் சிங்கர்', அதுக்குப் போகணும்னு என் கடைசி ஆசை. அது நிறைவேறுமா?'' என ஆவலோடு கேட்பவர்...
  காளையார்கோயில், நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி காளி கோயில் திருவிழா நடக்கும்போது ஜோடி பெண்களாக கும்மி கொட்டுவாங்க. நாங்க அந்த டீம்ல சேராம தனியாக கும்மி பாட்டுப் பாடுவோம். சின்னபிள்ளையாக இருக்கும்போதே, செத்தவுங்களுக்கு மாரடிக்கிற பாட்டுப் பாடுவேன். ஓப்பாரி பாட்டு நல்லா பாடுவேன். எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி இறந்தப்ப நான் மாரடிச்சு பாடினதை ஊரே மூக்கு மேல விரல்வெச்சு கேட்டுச்சுன்னா பாருங்களேன்'' என்றவர், தனது கதையைத் தொடர்கிறார்.  ''என்னைப் போன்ற சிறிய கலைஞர்களை நினைச்சுப் பாருங்க. எனக்குப் பிள்ளைகள் இல்லை. என் பிள்ளைகள் எல்லாம் நடிகர்கள்தான். அவங்கதான்  உதவி செய்யணும்'' என்று உருக்கமாக முடிக்கிறார் கருப்பாயி.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad