Header Ads

  • சற்று முன்

    பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் செல்லும் காட்சிகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


    சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றியது மட்டுமில்லாமல் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. 59 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக, நேற்று பிப்லாப் குமார் தேப்  பதவியேற்றார். 

    தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற விழாவில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் பிரதமர் மோடியும் விழாவில் கலந்துகொண்டார். முன்னதாக பிரதமர் மோடி மேடைக்கு வரும்போது, மேடையில் அமர்ந்திருந்த அமித் ஷா, ராஜ்நாத் சிங்குக்கு வணக்கம் தெரிவித்த மோடி, அத்வானியை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். அதிலும், அத்வானி வணக்கம் தெரிவித்தும் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்காமல் நேரிடையாக மாணிக் சர்க்காரிடம் சென்று  பேசினார். இதனால் அத்வானி வருத்தத்துக்கு உள்ளானார். இந்தக் காட்சிகள் தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், பிரதமரின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad