சட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு
சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் சிலர் வெள்ளியன்று இரவு சுங்குராம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு மது கேட்டு தகராறு செய்தனர்.
டாஸ்மாக் பார் ஊழியராக பணியில் இருந்த அனுமன் என்பவர் தர மறுத்தால் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அனுமனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து பார் பொருப்பாளர் சொக்கலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் யானைகவுனி காவல் துறையினர் சட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.








கருத்துகள் இல்லை