41 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.41 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்👍. மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஹைதர் அலி என்பவரது லேப்டாப் சார்ஜரை ஸ்கேன் செய்தபோது , அதில் சுமார் 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 350 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை