Header Ads

  • சற்று முன்

    பெரம்பூர் லோக்கோ தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மத்தியரசு



    பெரம்பூர்: சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனை மற்றும் ரயில்வே ஸ்டோர் ஆகியவற்றை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்இஎஸ் சங்கம் சார்பில், லோகோ பணிமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஆர்ப்பாட்டத்துக்கு லோகோ மெக்கானிக்கல் செயல் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.  சங்க கிளை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் சூர்யபிரகாஷ், இணை பொதுச்செயலாளர் சந்திரசேகர், உதவி கோட்ட செயலாளர்கள் ஹமந்குமார், விஜயகுமார், சுமாறன், சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

    இதுபற்றி கோட்ட செயலாளர் சூர்யபிரகாஷ் கூறுகையில், “கடந்த 80 ஆண்டுக்கு மேலாக  பெரம்பூர் லோகோ பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏசி இன்ஜின், டீசல் இன்ஜின், ரயில் பெட்டிகள், செயின் பராமரிப்பு மற்றும் ரயில்வே சம்பந்தப்பட்ட  பொருட்கள் தயாரிக்கப் படுகிறது. 500 தொழிலாளர்கள்  பணியாற்றி வருகின்றனர். ரயில்வே ஸ்டோரில் 500 தொழிலாளர்கள் உள்ளனர். இப்பணிமனையை மூடினால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும்.

    பெரம்பூர் லோகோவில் இருந்துதான் பல இடங்களுக்கு ரயில்வே உதிரி பாகங்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள், பயணிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்படுகிறது. பெரம்பூர் லோகோ பணிமனையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு துடிக்கிறது. இந்த போக்கை மத்திய அரசு கைவிடவேண்டும்’ என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad