Header Ads

  • சற்று முன்

    அதிமுகவில் முதல்வர் எடபாடி பழனிச்சாமி விலை 2,000 கோடி


    முதல்வர் பதவிக்கு ரூ.2000 கோடி செலவு செய்த எடப்பாடி : தினகரனை ஒதுக்கிவைத்ததன் பின்னணி! வெளிவராத உண்மைகள்.., 
    கட்டுபடியாகாத கப்பம்... கழற்றி விடப்பட்ட தினகரன்! கழகத்தின் கதை - அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை’
    அதிமுக சசிகலா அணி சார்பில் சசிகலா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அதுகுறித்த கடிதங்கள் ஆளுனரிடம் தாக்கல் செய்யப்பட்டது வரை அனைத்தையும் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர் தினகரன் தான். கூவத்தூர் கொண்டாட்டங்களை திட்டமிட்டு நடத்தியதும் தினகரன் தான். 

    ஆனால், இத்தனைக்கும் அவர் அதிமுகவில் உறுப்பினராக இல்லை. காரணம் அவர் 2011-ஆம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


    சசிகலாவுக்கு சிறை, எடப்பாடிக்கு பதவி!
    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டு சிறைக்கு செல்ல வேண்டியிருந்த நிலையில், நம்பிக்கைக்குரிய செங்கோட்டையனை முதலமைச்சராக்க நினைத்தார். ஆனால், செங்கோட்டையனிடம் பணம் இல்லாத நிலையில், ஊழல் செய்து பணத்தைக் குவித்து வைத்திருந்த எடப்பாடியை முதல்வராக்க முடிவு செய்ததும் தினகரன் தான். சசிகலாவை இதற்கு சம்மதிக்க வைத்ததும் அவரே. அப்போதும் தினகரன் அதிமுக உறுப்பினராக இல்லை.

    சசிகலா பெங்களூர் சிறைக்கு புறப்படும் வேளையில் கட்சியைக் கவனித்துக் கொள்வதற்காக நம்பிக்கையான ஆள் தேவை என்று நினைத்த சசிகலா, அதிமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தமது குடும்பத்தினர் 13 பேரில் தினகரனையும், அவரது மைத்துனர் மருத்துவர் வெங்கடேசையும் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதாக அறிவித்தார்


    அதுமட்டுமின்றி, அன்றே அவருக்கு அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் வழங்கினார். அரசியல் வரலாற்றில் துரோகச் செயலுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த நிமிடமே துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உருவாக்கி வழங்கப்பட்டது அதிமுகவில் மட்டும் தான். அடிமைகள் கட்சியில் எந்த நேரம் வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம் தானே.
    சசிகலா சிறைக்கு சென்று விட்ட நிலையில் எடப்பாடி முதலமைச்சர் ஆனார். எடப்பாடியை முதல்வர் ஆக்கிய தினகரன், ஜெயலலிதாவை விட ஒருபடி கூடுதலாக தம்மை நினைத்துக் கொண்டு அவரையும் மற்ற அமைச்சர்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கினார். 

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, அவருக்கு எப்படி கப்பம் கட்டப்பட்டதோ, அதேபோல் தமக்கும் அமைச்சர்கள் கப்பம் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார். முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.2000 கோடி செலவு செய்த எடப்பாடி இதைக் கேட்டதும் மிரண்டு போனார். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad