ICFன் சாதனை 105கிலோ மீட்டர் வேகம் செல்லகூடிய அதி நவீன இரயில் விரைவில் இயக்கம்
சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 3ஆம் கட்ட மின்சார ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (பிப்.20) தொடங்குகிறது.
இதில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 6 மின்சார ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 3 மின்சார ரயில் சேவைகளும் வழங்கப்பட உள்ளன. முதல் சேவையாக தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். 12 பெட்டிகள் கொண்ட 4 ரயில்கள் இதில் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் பயணிகள் பாதுகாப்புடன் கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு ரயிலில் 1,168 பேர் அமர்ந்தும், 4,852 பேர் நின்றுகொண்டும் பயணம் செய்ய முடியும். மற்ற ரயில்களை விட 20 சதவீதம் கூடுதல் கொள்ளவும் கொண்டது. இந்த ரயிலில் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பெண்கள் பெட்டியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எல்.இ.டி வசதி, இழுப்பு சங்கிலி, 30 சதவீதம் கூடுதல் திறன் கொண்ட பிரேக் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. ரயில் நிலையங்களை அறிவிக்கும் திரையும் அமைக்கப் பட்டுள்ளது. அதிகபட்சமாக 105 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில்கள் சென்னை ICF
.இல் தயாரிப்பட்டவை.
கருத்துகள் இல்லை