Header Ads

  • சற்று முன்

    காலம் வீட்டிலிருந்து கமலின் அரசியல் பயணம் ஆரம்பம்


    ராமேஸ்வரம்: கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குவது பெரும்பேறு என நடிகர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அரசியல் பயணத்தை தொடங்கிய கமலில் முதல் டிவிட் இதுவாகும். நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். கலாம் வீட்டிற்கு சென்ற கமலை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் ஆசிர்வாதமும் வாழ்த்தும் தெரிவித்தார். இந்நலையில் கலாம் வீட்டிற்கு சென்றது குறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதாவது கலாமின் வீட்டிலும் அவரது வீட்டாரிடமும் பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டதாக கமல் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே தானும் தன் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன் என்றும் கமல் டிவிட்டியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad