Header Ads

  • சற்று முன்

    மோடி புகழாரம் பாடும் தமிழக முதல்வர் ... முகம் சுளிக்கும் தொண்டர்கள் ....


    முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் அவர் பெயரில் அறிவிக்கப்பட்ட ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை’  சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அ.தி.மு.க. கட்சிக்குள் தொடர்ந்து சலசலப்புகள் இருந்துவந்தாலும் பிரதமர் மோடி பங்கெடுத்த விழாவில் வேற்றுமையிலும் ஒற்றுமைபோல கட்சியின் அனைத்து தரப்பினர்களையுமே காணமுடிந்தது. ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்டாலும் அது பிரதமர் மோடி புகழார விழாவாக அமைந்துவிட்டதாக தங்களது அதிருப்தியைப் பகிர்ந்துகொண்டுள்ளனர் தினகரன் தரப்பினர். 

    அவர்கள் கூறுகையில்,”தமிழக சட்டமன்றத்துக்கான 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உழைக்கும்  பெண்களுக்கு இருசக்கர வாகனத் திட்டம் மானிய விலையில் தரப்படும் என்று அறிவித்தார். டிசம்பர் 5 ஆம் தேதி, ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பின்னர், எடப்பாடி பழனிசாமி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது, ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கோப்பு, அம்மா இரு சக்கர வாகன திட்டம். அவர் போட்ட முதல் கையெழுத்தை நிறைவேற்ற ஓராண்டு ஆகியிருக்கிறது. இதைப் பிரதமர் மோடி முன்னிலையிலேயே எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad