Header Ads

  • சற்று முன்

    மதுரை முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து தென்னகரெயில்வே பொது மேலாளர் குல்ஷரெஷ்தா பேட்டி


    மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்ஷரெஷ்தா இன்று தூத்துக்குடி ரெயில்வே நிலையத்தில் ஆய்வு பணிகளை முடித்து கொண்டு கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.தொடர்ந்து ரெயில்வே பணியாளர்களின் குறைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்த அவர் சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். ஆப்ரேட்டிங் ஸ்டாப்ஸ் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு புதிய லெதர் பேக் வழங்கப்பட்டது. சிக்னல் டெலிகம்னிகே~ன் ஊழியர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அடங்கிய போஸ்டர் வழங்கப்பட்டது. கோவில்பட்டி அருகேயுள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங், கோவில்பட்டி நள்ளி இடையில் உள்ள ரெயில்வே பாலத்தினையும் ஆய்வு செய்தார். ரெயில்வே ஊழியர்களிடம் மழைக்காலத்தில், விபத்து காலத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார். மேலும் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில் எப்படி பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார். கேங்மேன் வேலையில் தற்பொழுது பெண்கள் அதிகம் உள்ளனர் அவர்கள் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டதை பார்வையிட செல்லும் போது பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  அது குறித்த கேட்டறிந்தார். அவர்களுக்கு யூனிபார்ம் வழங்கப்பட்டள்ள பின் பிரச்சனைகள் இல்லாமல் மனநிறைவுடன் வேலை பார்ப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை – தூத்துக்குடி இடையே ரெயில் பாதைகள் நிலைமை அதன் திடத்தன்மை, ரெயில்வே நிலையங்களில் உள்ள அடிப்படைவசதிகள், பணியாளர்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தாகவும், இரட்டை ரெயில் பாதை அமையும் போது ரெயில்வே நிலையங்களுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்றும், மதுரை கோட்டாட்டதில் முக்கிய ரெயில்வே நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டு, மதுரையில் இருந்து கண்காணிப்பு செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது நல்ல வரவேற்க கூடிய முயற்சி, கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளது. கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் காவல் நிலையம் அமைக்க இடம் கொடுக்கவும், கூடுதல் திறன் கொண்ட ஜெனரேட்டர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
    ஆய்வின் போது, தென்னக ரெயில்வே தலைமை இயக்க மேலாளர் அனந்தராமன், தலைமை வர்த்தக மேலாளர் பிரியம் வதே, மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்யேரா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    தென்னகரெயில்வே பொது மேலாளர் குல்ஷரெஷ்தாவை பாரதி ஆய்வாளர் இளசைமணியன் சந்தித்து சுதந்திர போராட்ட வீரர் ஆஷ்துரை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் திருவுருவ சிலையை வாஞ்சி மணியாச்சி நிலையத்தில் அமைக்க வேண்டும்,இளைஞர்கள், வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது வரலாற்றினை தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    இதே போன்று கோவில்பட்டி ரெயில்வே நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் சேதுரத்தினம் கோரிக்கை மனு அளித்தார். அவரது மனுவில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தகவல் மையம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கருதி சீ.சீ.டிவி கேமரா அமைக்க வேண்டும். பிரதி வெள்ளிக்கிழமை கோவில்பட்டி வழியாக இரவு 7 மணிக்கு நாகர்கோவில் டூ சென்னை செல்லும் வாராந்திர ரயில் கோவில்பட்டி ரயில்வே ஸ்டே~னில் நிறுத்த வேண்டும். பயணிகள் முன்பதிவு மையம் மாடியில் செயல்படுவதால் மாற்று திறனாளிகள் பயன் பெறும் வகையில் சாய்வு தளபடி அமைக்க வேண்டும் மேலும் முன்பதிவு அறிவதற்கு ரிசர்வே~ன் டச் ஸ்கிரீன் ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது பிளாட்பாரத்தில் ரயில் பயணிகள் அமர்வதற்கு கூடுதல் மேற்கூரை, இருக்கை வசதிகள், குடிநீர், கழிப்பறை, கூடுதல் மின்விளக்குகள் ஆகியன அமைக்க வேண்டும். மேலும் பயணிகளுக்கு பயன்படும் சிற்றுண்டி கடைகள், பேப்பர் கடைகள் ஆகியன மூடியுள்ளது மீண்டும் திறக்க வேண்டும் என்றார்.

    மதிமுக மாநில விவசாய அணி இணை செயலாளர் வரதராஜன் அளித்த கோரிக்கை மனுவில் மாற்று திறனாளி ரயில் பெட்டிகளை வரிசைப்படுத்தி நிரந்தரமாக இணைப்பது தொடர்பாகவும், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்,,மாற்று திறனாளிக்காக இணைக்கப்படும் ரயில் பெட்டியானது முன் பக்கத்தில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியாகவோ அல்லது கார்டு பெட்டிக்கு முன்னதாகவோ நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். தற்போது பெட்டி இணைப்பு என்பது முதலில் உள்ளதா கடைசியில் உள்ளதா என்ற குழப்ப நிலையில் உள்ளது. இதனால் மாற்று திறனாளிகள் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad