• சற்று முன்

    தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்


    தூத்துக்குடியில் கடந்த 20ந்தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலமாநாட்டினை முன்னிட்டு நடைபெற்ற  பேரணியின் போது காவல்துறை மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடம் மோதல் ஏற்பட்டது. அமைதியாக சென்ற பேரணியில் தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. நாகசெல்வரத்தினம் காட்டுமிரண்டி தனமாக தாக்கியதாகவும், அதில் கட்சிதொண்டர்கள் காயமடைந்துள்ளதாகவும், கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரியை கண்டித்து கோவில்பட்டி பயணியர்விடுதி முன்பு மார்க்சிய 


    கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில்மாவட்டக்குழு உறுப்பினர் ராமசுப்பு, நகரக்குழு உறுப்பினர்கள் விஜயலெட்சுமி, முத்துகாந்தரி,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கொம்பையா, அந்தோணி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad