• சற்று முன்

    கூலி உயர்வு கேட்டு கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்



    கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான கூலி உயர்வு வழங்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டத்தில் உள்ளபடி தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பஞ்சப்படி, பி.எப். இ.எஸ்.ஐ. உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கு மேலாக தீப்பெட்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு .ஐ.டி.யூ.சி. தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலூகா தீப்பெட்டி தொழிலாளர் சங்க துணை தலைவர் பாபு கண்டன ஆர்ப்பாட்டத்திற்க தலைமை வகித்தார். உதவி செயலாளர் சரோஜா முன்னிலை வகித்தார்;. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் 500க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad