• சற்று முன்

    எட்டயபுரம் சுப்பாராஜ் நினைவு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா



    எட்டயபுரம் சுப்பாராஜ் நினைவு கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா  கல்லூரி மாணவியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

     கல்லூரி வளாகத்தில் கல்லூரி பேராசிரியர் ராமேஷ்கண்ணன் வரவேற்று பேசினார்.  பொங்கல் விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்து அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ சிந்தனையுடன்  பொங்கல் விழாவினை கொண்டாட வேண்டுமென பேசினார். தொடர்ந்து தமிழர் பண்பாடு மற்றும் பொங்கல் வரலாறு என்ற தலைப்பில் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்லூரி தாளாளர் தீபா ராமசந்திரன் ஆன்மீகத்தில் பொங்கல்  என்ற தலைப்பில் பேசினார்.
    பின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பாரதம், பாடல், குழு நாடகம், உறியடித்தல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டு போட்டிகளும் நடந்தது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் ராஜீ, தவசி, கார்த்திகைசெல்வி, மாணவர் செயலாளர் முத்துராமன், மாணவிகள் செயலாளர் அந்தோணி லிண்டா  உட்பட முதலாமாண்டு, இரண்டாமாண்டு  மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி விரிவுரையாளர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad