Header Ads

  • சற்று முன்

    திரை அரங்குகளில் தேசியகீதம் இசைப்பது இனி கட்டாயம் இல்லை .


    நாடு முழுவதும்  அனைத்து திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன்  கட்டாயம் தேசியகீதம் இசைக்க வேண்டும். அப்போது  திரையில் தேசிய கொடி படம் தோன்ற வேண்டும்   என்று 2016 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது .மாற்று திறனாளிகள் உளிட்ட இயலாதவர்கள் எழுந்து நிற்கமுடியுமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது . இதை தொடர்ந்து மத்திய அரசு குழு அமைத்து உடனடியாக விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது .

    பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் குறைந்தது 6 மாத கால அவகாசம் தேவை என்று கேட்டுகொண்டதன் பேரில் உச்சநீதிமன்றம் உத்தரவை மாற்ற கோரி மத்திய அரசு சார்பில் பிரமணா பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது . இதன் பிறகு தேசியகீதம் இசைப்பது கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது .


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad