பரபரப்பான அரசியல் சூழலில் தினகரன் சசிகலாவை சிறையில் சந்திப்பு
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, தற்போது மவுன விரதம இருந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், டி.டி.வி.தினகரன் சசிகலாவை இன்று சந்தித்துள்ளார்.
சந்திப்பின் போது, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தினகரன் சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. அம்மா அணி பெயரை பயன்படுத்த அனுமதி கோரி தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக ஆலோசணையும் தினகரன் நடத்தியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் சிறைக்கு சென்று நேரில் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி திட்டமிட்டுள்ளார், அதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “15 நாட்களுக்கு ஒருமுறை சசிகலாவை சந்தித்து வருகிறேன். என்னுடன் 6 பேரை மட்டுமே சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது. இளவரசி, திவாகரன் ஆகியோரை சந்திக்கவில்லை” என அவர் தெரிவித்தார். சசிகலாவை சந்தித்த பிறகு தினகரன் இன்று மாலையே சென்னை திரும்புகிறார்







கருத்துகள் இல்லை