Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!!!


























    நமது நிருபர் 
    எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி  கிராநிர்வாக அலுவலர்கள் காத்திருப்ப போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

    தற்போது அரசு வழங்கும் சான்றிதழ்கள் அனைத்தும் இணையதளம் மூலமாகவே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் இணையத்திற்கு ஆகும் செலவினை கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் சொந்த பணத்திலிருந்து செய்து வருகின்றனர். மேலும் அம்மா திட்டமுகாம் ஒவ்வொரு கிராமத்தில் நடைபெறும் போதும் அரசு சார்பில் வழங்கப்படும் செலவு தொகையான ரூ5000த்தையும் இன்னும் தரவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று (8 ம் தேதி) மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தை  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து  தலைமையில் தொடங்கியுள்ளனர்.

    இதில் கலந்து கொண்டவாகள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார்,  எட்டயபுரம் கிராம நிர்வாக அலுவலர்  கவிதா மற்றும் வட்டதலைவர் ராமமூர்த்தி உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து ‍ கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad