கோவில்பட்டியில் மக்களின் குறைகளை கேட்காமல வாட்ஸ் அப் பார்த்த கோட்டாட்சியர்
நமது நிருபர்

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டாட்சியர் அனிதாவை சந்தித்து, மனு அளித்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை குறித்து தெரிவித்தனர்.ஆனால் கோட்டாட்சியர் அவர்கள் கூறுவதை எதையும் காதில் வாங்கி கொள்ளமால், தொடர்ந்து தனது செல்போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டு இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையெடுத்து அவர்கள் வெளியேறி கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் குறைகளை கேட்கமால் கோட்டாட்சியர் அலட்சியமாக செல்போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 17ந்தேதிக்குள் சாதிசான்றிதழ் வழங்கவிட்டால் 18ந்தேதி முதல் காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை