Header Ads

  • சற்று முன்

    எதிர் கட்சி தலைவர் தரம் தாழ்ந்து பேசலாமா ?


    சட்டபேரவையில் இன்று குட்கா மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் குறித்து பேச வாய்ப்பு தர மறுத்ததால் டிடி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க நிதி பற்றாக்குறை இருக்கும் போது எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வை ஏற்கமுடியாது என்று கூறினார். குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும். குட்கா விவகாரத்தில் ஏற்கனவே விசாரித்து வந்த ஜெயகொடியை மாற்றப்பட்டது ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
    சட்டபேரவை வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலை வைப்பதை குதர்க்கமாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்னை விமர்சித்த தினகரன். நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் மக்கள் மன்றத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad