Header Ads

  • சற்று முன்

    18 எம்.எல்.ஏ.களின் தகுதி நீக்கம் வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு !!



    கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெறுகிறது.

    தமிழக சட்டப்பேரவையில் இருந்து கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கு சென்னை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது , முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அவரது உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றார்.
    இந்த வாதங்களுக்கு பதிலளித்த கழக துணைபொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் , பேரவைத் தலைவர் எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியவுடன் அதற்கு பதில் தர உரிய கால அவகாசம் தரவில்லை. மேலும், சம்மந்தப்பட்ட 4 பேரை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரினோம். அதற்கும் பேரவைத் தலைவர் சம்மதிக்கவில்லை- எங்கள் தரப்பினர் கேட்ட ஆவணங்களையும் பேரவைத் தலைவர் தரப்பு தரவில்லை-ஆளுநரிடம் மனு கொடுத்தோம் என்ற ஒரே காரணத்தைக் காட்டி தகுதி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் -
    எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு முறைகேடுகளில் சிக்கியிருப்பதால் அவரை நீக்க வேண்டும்- அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலத்தின் அதிக அதிகாரம் உள்ளவரிடம் மனு கொடுத்தோம். எடியூரப்பா வழக்கிலும் இதே பிரச்னை இருந்தது. ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காக எங்களை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது என தெரிவித்தார்.
    வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதி வாதத்தை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைப்பதாகவும், வழக்கில் எழுத்துபூர்வ அறிக்கையை வரும் 22ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad