போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 13 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகப் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்துவருகிறது. இதையடுத்து, சென்னை கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பிராட்வே ஆகிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.அதனால், சென்னையில் வேலை முடிந்து வீடு திரும்புகிறவர்கள் பேருந்துகள் இல்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர். அதனால், பல்வேறு பகுதிகளில் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதையடுத்து, பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களுக்கு காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மதுரை, திருச்சியிலும் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைக்குத் திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது .
கருத்துகள் இல்லை