Header Ads

  • சற்று முன்

    தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்து அவர்களின் மூத்த மகன் ஜெசி என்கிற சசிந்திரன்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்து அவர்களின் மூத்த மகன் ஜெசி என்கிற சசிந்திரன் நேற்று மாலை பண்ருட்டி அருகே காடம்புலீயூர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழப்பு.



    பண்ருட்டி ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் சிவக்கொழுந்து, இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சசிந்திரன், விஜய் ஆனந்த், என்கிற இரண்டு மகன்களும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர்.இவரது மூத்த மகன்ஜெசி (எ) சசிந்திரன் (24).இவர் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார்.
    இவர்நேற்று மாலை தனது நண்பர் விழமங்கலம் மணிகண்டன் என்பவருடன்  மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியிலிருந்து புறப்பட்டு ஆத்திரிகுப்பத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலைக்கு சென்றார்,காடாம்புலியூர் அருகே உள்ள காட்டாண்டிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சசீந்திரன், மணிகண்டன், எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த லட்சுமிணன் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்மூலம் அனுப்பி வைத்தனர்.வரும் வழியில் சசிந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார் மணிகண்டன், லட்சுமிணன் மேல் சிகிச்சைகாக கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ.  சிவகொழுந்து மற்றும் தேமுதிக தொண்டர்கள்

    பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.மகனின் உடலை பார்த்து கதறி அழும் காட்சி பரிதாபமாக இருந்தது.தகவல் அறிந்து கேப்டன் விஜயகாந்த், திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர்  தொலைபேசியில் சிவகொழுந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்

    இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து சசிந்திரன் உடல் ஜவஹர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது,முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள்,தேமுதிக நிர்வாகிகள், தொழில் அதிபர்ககள்,தொண்டர்கள், குடும்பத்தினர், வர்த்தக சங்க பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இன்று காலை 11 பிரேமலதா விஜயகாந்த்  மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஸ் அவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தனார்,மகனை இழந்து தவிக்கும் சிவகொழுந்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad