• சற்று முன்

    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயி கடன் மோசடி !!!


    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த சூரனம் கிராமத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி மோசடி நடந்ததை தொடர்ந்து விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.


    கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் கடன் பெற்றதாக போலி ஆவணங்களை தயார் செய்து வங்கி நிர்வாகிகளுக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டனர் . விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்று கடிதம் வீட்டிற்கு வந்த பிறகு வாங்காத கடனுக்கு தள்ளுபடியா ? என்று கொதித்த விவசாயி மக்கள் சூரனம் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். அபோதுதான் வங்கியின் மோசடி அம்பலமானது. பழைய கடன் பத்திரத்தை கொண்டு மோசடி செய்ததாக தெரிகிறது .இதற்கு கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர், காசாளர், ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. 5.66 கோடி பயிர் காப்பீட்டு மோசடி செய்தது அம்பலமானது . இது குறித்து மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது  வேதணையாக உள்ளது என்று பதிக்கப்பட்ட 962 விவசாயி மக்கள் தெரிவிக்கின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad