Header Ads

  • சற்று முன்

    பெண்களின் பாதுகாவலராக திகழந்தவர் ஜெயலலிதா - அமைச்சர் செ.ராஜீ


    கோவில்பட்டி மற்றும் கயத்தார் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் முத்துலெட்சுமி வரவேற்று பேசினார், மாவட்ட ஆட்சியர் பொறுப்பு டாக்டர்.வீரப்பன் தலைமையுரையாற்றினார். 

    விழாவில்  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கலந்துகொண்டு 350 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை,வளையல்கள்,பழங்கள்,வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ் சள், கயிறு இவைகள் அடங்கிய தாம்பூலத்தட்டுடன் கூடிய சீர்வரிசை பொருள்களை வழங்கி பேசுகையில் தமிழக பெண்களின் தாயாகவும் , பாதுகாவலராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார். அவர் இன்று மறைந்தாலும், அவருடைய மக்கள் திட்டங்களினால் நம்முடன் வாழ்ந்து வருகிறார். அன்புக்கு அன்னை என்று அழைக்கப்படும் அன்னை தெரசா நேரில் வந்து பாராட்டினார் என்றால், அது பெண்களுக்காக ஜெயலலிதா தீட்டிய திட்டங்கள் தான் காரணம் பெண் சிசு கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தினை கொண்டுவந்தார்.டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 6 ஆயிர ரூபாயை 12 ஆயிரமாக உயர்த்தியது மட்டுமின்றி, கடந்த தேர்தலின் போது 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவத்தார். அவர் வழியில் நடைபெறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அதனை உயர்த்தியுள்ளது. பெண்களுக்கு மிகவும் பேரூதவியாக இருக்கும் மகப்பேறு சஞ்சீவ திட்டத்தினை செயல்படுத்தினர், குழந்தை பெறந்தும் குழந்தைகளுக்கு அம்மா பெட்டகம் வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார். மேலும் பெண்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தாலிக்குதங்கம்  திட்டத்தினை கொண்டு பெண்கள் கல்வி பெறுவதை ஊக்குவித்தார். இந்தியாவிலேயே கருவுற்ற பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் திட்டத்தினை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா தான், அது மட்டுமின்றி, இலவச பேன், மிக்சி, கிரைண்டர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி என பெண்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி பெண்களுக்கு பாதுகாவலராக மட்டுமல்லாமல், மகளிர் ஆட்சியை நடத்தி காட்டி, ஆண்களும் தாங்கள் பெண்களாக பிறந்திருக்க கூடாத என்ற பொறைமை படும் அளவிற்கு திட்டங்களை ஜெயலலிதா தந்தார், தற்போது அவரது வழியில் நடைபெறும் இந்த ஆட்சி அனைத்து திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்றார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான சாதத்துடன் துவையல் வகைகள் , பல்வகைக் காய்கறிக்கூட்டு மற்றும் அப்பளத்துடன் சத்துணவு வழங்கப்பட்டது. 
    நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அனிதா, சுகாதாரபணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, நகராட்சி ஆணையர் அச்சையா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலெட்சுமி, வட்டாட்சியா ஜான்சன்தேவசகாயம் கலந்து கொண்டனர். இறுதியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிஷா நன்றியுரையாற்றினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad