Header Ads

  • சற்று முன்

    தமிழர்களின் பாரம்பரிய விழாவை கண்டு வியப்படைந்த வெளிநாட்டினர்




    தமிழர் திருநாளை முன்னிட்டு தஞ்சையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உள்ளூர் கலைஞர்களுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை கிராமத்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டு, சர்க்கரை பொங்கலை ருசித்து உண்டனர். தொடர்ந்து உள்ளூர் பெண்களுடன் கோலாட்டம் ஆடியும், உறியடித்தும் உற்சாகம் அடைந்தனர்.



    இளவட்டக் கல்லின் பெருமையையும், பழமையையும் அறிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அதைத் தூக்கி வீசி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தினார். பெண்கள் ஆடிய கபடி ஆட்டம், சிலம்பாட்டம், வாள் வீச்சு ஆட்டத்தை பார்வையாளர்கள் கைத்தட்டி ரசித்தனர்.கைரேகை பார்த்து ஜோசியத்தின் பலனை தெரிந்து கொண்ட சுற்றுலா பயணிகள், கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், காளியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad