நாளை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

நாளை ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது . அகில இந்திய தனியார் மருத்துவ கவுன்சிலை கலைக்கும் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவர்கள் நாளை காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை மருத்துவர்கள் பணிகளை புறகணிக்க இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கவுரவ செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவசர சிகிச்சை, பிரசவம் மற்றும் உள் நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை வழங்க வேண்டும் . புறநோயாளிகளுக்கு மருத்துவம் வழங்க கூடாது .
கருத்துகள் இல்லை