திருவண்ணாமலையில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் டிஎஸ்பி உயிரிழப்பு,
கிருஷ்ணகிரியில் பணியாற்றிவரும் துணை காவல் கண்காணிப்பாளர் (சமூக நீதி மனித உரிமைகள் ) திரு. சண்முகசுந்தரம் அரசு வேலையாக திருவண்ணாமலைக்கு காரில் சென்றார் .அவர் பணியினை முடித்துக் கொண்டு திரும்பும்போது இன்று அதிகாலை திருவண்ணாமலை வழியாக வரும் போது அரசு பேருந்து ஒன்று கார் மீது மோதியதில் காரில் பயணம் செய்த நாமக்கல்லை சேர்ந்த டி.எஸ் .பி . சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
உடன் வந்த சுந்தரம் என்பவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.இதனை அடுத்து சுந்தரத்திற்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை