Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - தனுசு


  நிறைந்த செல்வங்களைக் குவிக்கும் குபேரஆண்டாக இருக்கும். ஜென்மச்சனி காலகட்டமாக இருக்கிறது என்பதற்காக முடங்கிப்போய் விடாதீர்கள். மதிப்பு மரியாதைகளுக்கு அதிபதியான குருபகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் ரொம்ப ரசனையானவர்கள். எச்சூழலிலும் அனுசரித்துபோகும் பழக்கமிருப்பதால் உங்களை தட்பவெப்பப்புழு என்றே சொல்லலாம். ஏழை எளியவர்களுக்கு உதவிடும் இளகிய மனம் இருக்கும். கல்வியில் சிறந்து விளங்கி பெயர் சொல்ல வாழ்வீர்கள் சிலருக்கு கல்வியில் தடை ஏற்பட்டாலும் படிக்காத மேதைகளாக இருப்பீர்கள். ராசிக்கு பதினோராமிடத்தில் குரு இருப்பதால் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். எனவே ஏழரைச்சனியை கண்டு அஞ்சாமல் இருங்கள். தொழிலில் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவீர்கள். நீண்டநாள் கடன் பிரச்னைகளை குறுகிய காலகட்டத்தில் அடைத்து முடிக்கும் அளவிற்கு பொருளாதாரம் உயரும். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் பெரிய வாய்ப்புக்களை சுலபமாக அடைவீர்கள்.
  பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் தீர்க்கமான அடையாளங்களை பெறுவீர்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகள் தொடர்புடன் வருமானங்களை பெருக்குவீர்கள். கூட்டுத்தொழிலில் வருமானமின்றி தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் நிலையான மார்கெட்டைப் பிடிப்பீர்கள். பங்குசந்தை முதலீட்டாளர்களுக்கு திடீர் லாபங்கள் மனதை ஆசுவாசப்படுத்தும். ஏஜன்ஸி டைப் பிசினஸ்உமன்களின் இனபாக்ஸ் புதிய ஆர்டர்களால் நிரம்பி வழியும். சந்தை வியாபாரிகள் புதிய கஸ்டமர்களால் நிறைய லாபத்தை ஈட்டுவீர்கள். குழந்தை வரம் வேண்டி தவம் கிடப்பவர்களுக்கு இறைவனின் அருட்பார்வை படும். அரசுப் பணியாளர்ககளின் குடும்பங்களில் சுபகாரியங்கள் நடந்தேறும். கணவன் மனைவி உறவில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி முகம் பொலிவு பெறும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மெக்கானிகல் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட்கள் உடனடியாக வேலைகளில் அமர்வார்கள். வெள்ளி வியாபாரிகள் மற்றும் வெள்ளிக்கொழுசுகள் தயாரிக்கும் தொழிலில் உள்ளவர்களுக்கு வழக்கத்தை விட வேலைகளும் வருமானங்களும் அதிகமாக இருக்கும். எவர்சில்வர் பாத்திரப் பட்டறைகளில் மோட்டார்கள் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும் விதமாக வேலைகள் ஜரூராக நடந்து கொண்டே இருக்கும். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைக் கலைஞர்கள் புதிய வாய்ப்புகளால் ஜொளிப்பார்கள். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் விதமான படங்களின் இயக்குனர்களிடம் இருந்து நடிகைகளுக்கு  அழைப்பு வரும்.
  வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை ரசித்துச் செய்கிற ருஷியானவர்கள் நீங்கள். கலைநயமிக்க உங்களுக்கு விரும்பியவாறே திருமணம் கை கூடும். தொழில் விவகாரங்களில் இருந்து வரும் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். நிலம் சம்மந்தமாக நடந்து வரும் வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாக வரும். குடும்பச் சொத்தில் சகோதர உறவு முறைகளுக்குள் இருக்கிற இடியாப்பச் சிக்கல்கள் அவிழ்ந்து பாகப் பிரிவினைகள் நல்ல விதமாக நடக்கும். அரசுபணியாளர்கள் குடும்பத்தின் சுபகாரியங்களுக்காக அதிகம் செலவழிக்க வேண்டிவரும். தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். நீண்டகாலமாக விலைசொல்லியும் விற்கப் போராடிக் கொண்டிருக்கும் பூர்வீக சொத்துக்களை விரைவில் காசாக்குவீர்கள்.  பெண்ணியக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் புதிய அடையாளங்களைப் பெறுவார்கள். செல்போன் கடைகள் வைத்திருப்போர் விற்பனையை விட சர்வீஸ்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். அழகுக்கலை நிபுணர்கள் புதிய ஆர்டர்களால் சந்தோஷம் கொள்வார்கள். சாலையோர பூ வியாபாரிகள் புதிதாக கடை திறப்பார்கள். வீடுகளில் விபரம் தெரிந்த காலம் முதல் திறக்கப்படாத பீரோக்கள் இருக்கும் அது யோகம்தான்.!

  தொடர்புக்கு : 9965405351
  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad