Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - துலாம்


  உங்களையும் அறியாமல் மெய்ஞானம் வலுக்கும் ஆன்மிக ஆண்டாக இருக்கும். இதுவரை ஏழரைச்சனியால் பட்டபாடு போதும் உங்களுக்கு. இனி உங்கள் முகத்தில் சந்தோஷம் தித்திக்கும். விட்டகுறை தொட்டகுறை ஏதேனும் இருந்தால்தான் உங்களை எவரும் நெருங்கவே முடியும். ஏனென்றால் ஜென்மம் ஜென்மமாய் தொடர்கிற உறவுகளை இணைத்து வைப்பவராக சாஸ்திரத்தில் ராகுவே இருக்கிறார். அவர் உங்களுக்குள் அமானுஷ்ய விஷயங்களை ஒளித்து வைத்திருப்பார். வெளி இடங்களுக்கு செல்கிற போது இங்கு முன்னரே வந்தது போன்ற உணர்வுகள் வெளிப்படும். சிலரோடு முதல் சந்திப்பாக இருக்கும் ஆனால், அவரோடு முன்னரே பேசிப் பழகியிருப்பது போன்று தோன்றும். சில நிகழ்வுகள் முன்னதாகவே எண்ணங்களில் அல்லது தூக்கக்கனவுகளில் வெளிப்படும். உங்களோடு பழகுகிறவர்களுக்கு நீங்கள் புரியாத புதிராகவே இருப்பீர்கள். இவற்றையெல்லாம் உங்களுக்குள் உணர்த்திக் காட்டுபவர் கர்மஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற ராகு பகவான்தான். பெரிய குடும்பங்களில் பிறந்திருந்தாலும் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து மீண்டவர்களாக இருப்பீர்கள். சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் இருந்திருக்கும். சிலருக்கு மனரீதியிலான பிரச்னைகளாக இருந்திருக்கும். இளமையில் சிலர் பெரிய தொழில்களில் அனுபவமின்றி கால் வைத்து பெரிய பொருளாதார இழப்புகளை சந்தித்திருப்பார்கள். எனவே எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும் சாமாளிக்கும் வல்லமை பெற்ற குணம் இயல்பிலேயே இருக்கும்.
  எடுக்கும் காரியம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அசராமல் மோதி வெல்லும் வல்லமை படைத்தவர்களாக இருப்பதால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் உணர்வுகளை மற்றவர்கள் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் சகோதர சகோதரிகள் மீது பாசத்தைக் காட்டுவீர்கள். பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாப்பதில் தந்தைக்கு படைத்தளபதியாக இருந்து குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவீர்கள். கிரியேட்டிவிட்டியான வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும் செல்வாக்குகளை அடைவார்கள். நீதி நியாயங்களுக்கு அதிபதியான சனிபகவானின் உச்சபலம் வெளிப்படும் துலாம்ராசியில் பிறந்த நீங்கள் கௌரவமும் குடும்ப பாரம்பரியமும் கெடாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கெட்டிகாரர்களாக இருப்பீர்கள். சமூகசிந்தனை கொண்டவர்களாக இருந்தாலும் குடும்பத்திற்காக எதையும் தூக்கிஎறியும் குணமுடையவர்களாக இருப்பீர்கள். அதேநேரம் மற்றவர்களைக் கவரும் விதமாக பேசி கைத்தட்டல்களைப் பெறுவீர்கள்.
  ராசியின் மீது குருபகவான் அமர்ந்திருப்பது ஜோதிடசாஸ்திரப்படி  சாதகமில்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே திருமண வயதை கடந்துவிட்டவர்கள் சுய ஜாதகங்களை தெளிவாக கணித்து மணமுடிப்பது நல்லது. ஏற்கனவே எலியும் பூனையும் போல மோதிக்கொண்டிருக்கும் காதலர்கள் தங்கள் உறவை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியதிருக்கும். தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் குறித்து முடிவெடுக்கும் போது சற்று நிதானித்து செயல்படுவது தேவையற்ற இழப்புகள் ஏற்படுவதை தடுக்கும். எப்போதும் வண்டி வாகனங்களில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எஞ்ஜினை வைத்துக்கொள்ளுங்கள். அம்மா, அப்பாவின் ஆலோசனைகள் கோபத்தை ஏற்படுத்தினாலும் காது கொடுத்துக் கேட்பது தேவையில்லாத பிரச்னைகளை உண்டாக்காது. சினிமா, சின்னத்திரை முயற்சியாளர்களுக்கு அனுபவங்கள் சிறந்த கிரியேட்டிவிட்டியை உருவாக்கிக் கொடுக்கும். பத்திரிக்கையாளர்கள் குறைந்த வயதில் பெரிய பதிவுகளை நிகழ்த்திக் காட்டுவார்கள். பழைய பொருட்களை விற்பவர்கள் மற்றும் பழைய பொருட்களை சேகரித்து காசாக்குபவர்கள் தங்கள் வருமானங்களை அதிகப்படுத்திக் கொள்வார்கள். இளம் பருவத்தில் காதல் சூட்சமங்கள் உங்களுக்கு அத்துபடி. திருமணங்கள் தாமதமானாலும் வாழ்க்கைத் துணையோடு அந்யோன்யம் காட்டுவீர்கள். காதில் பிரச்னை இருந்தாலும் பாதிப்புகள் பெரிதாக இருக்காது.

  தொடர்புக்கு : 9965405351


  கருத்துகள் இல்லை